அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு இருக்கையில் அமர்ந்தார்