கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கவும், ஒருங்கிணைக்கவும் பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில்  மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோரின் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 4ஆம் தேதி சென்னையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு முன் கூட்டணியை இறுதி செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.