தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை விஜய் தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் பின்னர் கட்சி செயற்குழு கூட்டமும் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் சீமான் மீது அதிருப்தி காரணமாக விலகி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதாவது வடக்கு மற்றும் தெற்கு பொய்கை நல்லூர் பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நாகை மாவட்ட TVK செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது.