ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா தலைவர் வாசனை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர். 2021 ஆம் வருடம் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜ் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.