இந்தோனேசியாவின் பப்புவா தீவில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.