தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் ஆசீம். இவர் மாநகராட்சி திட்ட குழு தலைவராகவும், ஆவடி மாநகர திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரை தற்போது ஆவடி நகர திமுக செயலாளர் பதவியில் இருந்து தூக்கியுள்ளனர். இந்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதவியில் தற்போது சன். பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ‌ கூறியுள்ளார். இந்த விஷயம் தான் தற்போது திமுகவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. இந்நிலையில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் நடப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வரே அமைச்சர்கள் இதுபோன்று நடந்து கொள்வது என்னுடைய தூக்கத்தை கெடுக்கிறது என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

இருப்பினும் அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாக பொது இடங்களில் தொண்டர்களை அடிப்பது, கல்லை தூக்கி வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக அமைச்சர் நாசர் நாற்காலியை போடாததால் ஒருவர் மீது கல்லை தூக்கி வீசும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதன் காரணமாக தான் முதல்வர் ஸ்டாலின் தற்போதைய அமைச்சர் நாசரின் மகன் ஆசீமை பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.