ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் செலவை கண்காணிக்க தேர்தல் ஆணையம் வருமானவரித்துறையை அணுகிய நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு வருமான வரி தலைமை இயக்குனரகம் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறை பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும் பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த பணம் பட்டுவாடா ஏதேனும் நடந்தால் அது பற்றி பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669, வாட்ஸ் அப் நம்பர் 94453 94453, மின்னஞ்சல் முகவரி [email protected]/போன்ற முகவரிகளுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.