ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். நாளை பிற்பகல் 3 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் இறுதி பட்டியல், அவர்களின் பெயர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியோருக்கு இடையே தான் மோதல் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன் பிறகு நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக கட்சி போன்றவைகளும் ஈரோடு கிழக்கில் களமிறங்கியுள்ளது. இது தவிர சுயேட்சைகளிலும் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். இந்நிலையில் சுயேச்சைகளில் நிற்பவர்களுக்கு சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 191 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னங்களை வேட்பாளர்கள் தேர்வு செய்த பிறகு நாளை அறிவிப்பு வெளியாகும். மேலும் ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் தேர்வு செய்து இருந்தால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் ‌