ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 51 ரன்களுக்கு சுருண்டது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 8.2 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.