இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து ஹெல்மெட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.