இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களது காதலிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் என்பதை சமீபத்தில் வெளியான சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

அதாவது டெல்லியை சேர்ந்த இளைஞர் ராகுல் இவர் தனது காதலி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக 121 லிட்டர் கங்கை நீரை தூக்கிக்கொண்டு 220 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சிவபெருமானை வேண்டி பிரார்த்தனை செய்துள்ளார்.

ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் அவரது காதலி இப்போதுதான் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும் வரை இது போன்ற வேண்டுதலை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளாராம். சம்பவம் குறித்து சமூக வலைதளப் பயனர்கள் பலரும் வேடிக்கையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.