செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  1994 ஜனவரி மாதம்…. அப்போது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தின் போது….. வேந்தர் நியமனம் குறித்து சட்டம் முன்னெடுப்பு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் என்ன கருத்தை தெரிவித்தார்கள் என்பதை பற்றியும்,  சட்டமன்றத்திலே தெரிவித்தோம். 1996இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அப்பொழுது மாண்புமிகு அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள்,  இது குறித்து சட்டமன்றத்திலே பேசியிருக்கிறார்.  அதையும் சட்டமன்றத்திலே நான் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தேன். அதையும் இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். எல்லா பல்கலைக்கழகங்களிலும் முதலமைச்சர் வேந்தராக இருக்க  வேண்டும் என்பதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்.

அந்த நோக்கம் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நல்ல நோக்கம் அல்ல, அப்படின்னு அவர் பேசி இருக்கிறார். அதற்கு பிறகு பல்கலைக்கழகத்தினுடைய தனி உரிமை கைவிடப்படுவதாக ஒரு எண்ணம் ஏற்பட அது,  இடம் தருகிறது. ஆகவே இந்த அரசு அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் தனித்து சுயமாக இயங்குகின்ற ஒரு வாய்ப்பை கெடுக்க கூடாது என்பதற்காகவே அந்த சட்டத்தை பின்வாங்குவதாக…. கைவிடுவதாக முடிவெடுத்து அறிவித்திருக்கின்றேன்.

1996-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் வேந்தர் நியமனம் குறித்து கொண்டு வந்து சட்டம் மசோதாவுக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு….  மாண்புமிகு அமைச்சர் அன்பழகன் சொன்ன கருத்து இது. அதற்குப் பிறகு திமுக தலைவர் திரு. கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதி என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நான்காம் பாகம் … அதில் 511வது பக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதையும் நான் சுட்டிக்காட்டுகின்றேன் என தெரிவித்தார்.