இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 65 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர்.

அதோடு 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 43 பேர் மாயமானர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 20 பேரை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.