
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தயவுசெய்து காங்கிரசையும், பிஜேபியும் இதுல ஒப்பிடாதீர்கள். புதிதாக வருஷத்துக்கு ஒரு கோடி பெண்கள் இலவச இணைப்பு பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 200 ரூபாய் மானியம் இந்த அறிவிப்புல இருக்கு. தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு 100 ரூபாய் மணியம்னு அறிவிச்சிட்டு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆட்சி நடத்துற இந்த மாநில அரசு இத பத்தி பேசுறதுக்கு எந்த விதமான அருகதையும் இல்லை.
குடும்ப ஆட்சி நடத்துகின்ற… ஊழல் கறைப்படிந்த அத்தனை பேரும்… ஒரே மேடையில் அமர்ந்து… நேர்மையாக ஆட்சி நடத்துகின்ற.. திறமையாக ஆட்சி நடத்துகின்ற… மோடிக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.
அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது இதுல மாற்றமே கொண்டு வரக்கூடாதுன்னு சொல்லல. காலத்திற்கு ஏற்ப, நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப சட்டத்தை மாற்றிக் கொள்கிறோம். அந்த மாதிரி இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி எல்லோரிடமும் கருத்து கேட்போம்.
பாரதப் பிரதமர் புதிதாக 10 கோடி இணைப்புகள்…. இப்போ 75 லட்சம் புது இணைப்புகளை கொடுக்கிறார். 9 வருஷ காலத்துல, வருஷத்துக்கு ஒரு கோடி புதிய இணைப்புகளை கொடுத்து…. பெண்களுக்கு அந்த வாய்ப்பையும் கொடுத்து…. இதுக்கு அப்புறம் சிலிண்டருக்கு 400 ரூபாய் கொடுக்கிறார்னு சொன்னா… இதுதான் பெண்களை பற்றி அக்கறை இருக்கக்கூடிய அரசு.
தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா பெண்களுக்கும் பணம் கொடுக்கிறோம். சிலிண்டருக்கு 100 ரூபாய் என்று சொல்லிட்டு, அதற்குப் பின்பாக வேறு ஏதோ காரணத்தை சொல்லி… பதுங்கிக் கொள்வதில்லை பாஜக அரசு. தமிழகத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு மகளிர் அணி சார்பாக…. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் இதற்காக விழிப்புணர்வு, நூதனமான பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க. இப்ப கூட முன்னாடி பாத்தீங்கன்னா…. கோலம் போடுவது கூட சிலிண்டர் கோலம் போட்டு, தேங்க்யூ மோடிஜி போடுறாங்க என தெரிவித்தார்.