இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் 1000 வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வு 23.09.23 அன்று நடைபெற இருந்த நிலையில், 30.09.23 அன்று மாற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு, ஒரு கல்வியாண்டுக்கு மாதம் 1000 வீதம் மொத்தம் 10 மாதங்களுக்கு 10,000 உதவித் தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை பட்டப்படிப்பு வரை அரசு வழங்குகிறது.