வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழக்கும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரளா இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பெறுவதற்கு அரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் வென்றதும் பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஓரிடம் தவிர அனைத்து இடங்களிலும் வென்றதுமே காரணம் என தெரிவித்தார்.

2019 தேர்தல் சமயத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் பாலக்கோட் தாக்குதல் கடைசி நிமிடத்தில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கிக்கு வழிவகுத்தது என்றார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற முடியாது என்றும் பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக குறைந்தது 50 சீட்களை இழக்கும் என்றும் அந்த இடங்களில் எதிர்கட்சிகள் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.