
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வன்முறைகள் மீது தீராத காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல, நாங்கள் நாங்கள் தேசிய விடுதலைக்கு போராடுகிற புரட்சியவாதிகள்”.எனக்கு இது சரின்னு படுது. அவர் சொன்னது சரி. ஐயா, ஸ்டாலின் சொன்னது சரி. நீ பழிவாங்குற, உனக்கிட்ட இருக்கிற இன்கம் டேக்ஸ் அதிகாரத்தை வச்சுக்கிட்டு, வருமான வரி சோதனை போடற. அது தெரியுதுல.
ரெய்டில் பொன்முடி வீட்டுல எடுத்திருக்க. அத என்ன பண்ண போற? பெனால்டி தானே. நீங்க பொன்முடி வீட்ல எடுத்தத சொல்றீங்க. மத்த வீடுகளில் ரைடு பண்ணதெல்லாம் வெளிப்படையா, விரிச்சு வச்சு, இதே மாதிரி ஊடகத்துகிட்ட இவ்வளவு சொத்து ஆவணங்கள் எடுத்துருக்குகோம், இவ்வளவு பணமா எடுத்திருக்குகோம், இவ்வளவு நகைகள் எடுத்திருக்குகோம், காட்டுனது உண்டா? அப்புறம்.காட்டவில்ல்லை தான அப்புறம்.
தமிழர்களுனுடைய பேரன்பு, பெருந்தன்மையினால் தமிழ் பேரினம் எப்படி விழுந்ததோ, அதேபோலவே பாலஸ்தீன மக்கள் தங்களுடைய பேரன்பு, பெருந்தன்மையினால, இன்னைக்கு அழித்து ஒழிக்கப்படறாங்க. இதான் ஈழத்தில எங்களுக்கு நடந்தது. உங்களுக்கு விளங்கும்னு நினைக்குறேன். இன்னைக்கு பாலஸ்தீன்ல நடக்குது, நாளைக்கு எனக்கு நடக்கும்.
வட இந்திய தொழிலாளி ஒன்றரை கோடி வரான், ஒரு கோடி வரான்னு எல்லா பேசி கிட்டு இருக்கோம்ல. இப்ப பாலஸ்தீனத்தில வந்து, பாலைவனத்துல பாவம் நாடற்ற மக்கள்னு இஸ்ரேலில் இடம் கொடுத்தான்… அங்க வந்து இருந்துகிட்டு மொத்த நாட்டையும் தனதாக்கி கொள்ள அடிக்கிறான். எங்க ஊர்ல, “நரிக்கு வந்து படுக்க இடம் கொடுத்துட்டம்ன்னா கெடைக்கி இரண்டு ஆடு கேட்குனும்பான்”. அது மாறி இவன் கெடைக்கு ரெண்டு ஆடு கேட்டுட்டு இருக்கான்.
இதேதான் எங்களுக்கு ஈழத்துல நடந்தது. சிங்கள வந்து குடியேறினான்…. அப்படி ஒரு இனமே இல்ல. அது ஒரு கலப்பினம். ஆனால் பூர்விகுடி மக்கள, எங்கள, நாடற்றவனாக்கி, அடிச்சு விரட்டிட்டு மொத்த இலங்கையும் தன தாக்கிக்கொள்ள துடிக்கிறான். ஆக்கிடான். ஏறக்குறைய, அதே தான் இன்னைக்கு பாலஸ்தீனத்துலயும் நடக்குது என தெரிவித்தார்.