
பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் டுவிட் செய்துள்ளார். மேலும் வினோத் செல்வன் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாக பாஜகவினர் பலரும் டுவிட் செய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள @BJP4TamilNadu மாநில செயலாளர், அன்பு சகோதரர் திரு.@VinojBJP அவர்கள், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/JBA291SVnV
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) April 7, 2023