ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு அருகில் துப்புரவு முன்னெடுப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யா வந்துள்ளார். அவரது வருகைக்கு காத்திருந்த மாவட்ட ஆட்சியர் அவரது கார் வந்தவுடன் வேகமாக சென்று 5 முறைக்கு மேல் வணக்கம் வைத்துள்ளார்.

போனை பார்த்தபடியே காரில் இருந்து இறங்கிய சதீஷ் பூண்யா மாவட்ட ஆட்சியரை கவனிக்காமல் சென்றுள்ளார். டீனா டாபி 7 வினாடிக்குள் 5 வது முறை வணக்கம் வைக்கும் போதே சதீஷ் பூண்யா கவனித்துள்ளார். பின்னர் அவரிடம் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்துக்கள் கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.