நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளை திமுகவிற்கு கொடுத்து விட்டீர்கள். அடுத்து 20 ஆண்டுகளை அதிமுகவிற்கு கொடுத்துவிட்டீர்கள்.

விடுதலை பெற்ற இந்தியா காங்கிரசின் கையில் 50 ஆண்டுகளாக ஆள அனுமதித்து விட்டீர்கள். அவர்களின் சகித்துக் கொள்ள முடியாத ஊழல் மற்றும் லஞ்சத்தினால் தான் பாஜக எனும் கட்சி தோன்றியது. மத்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் தனியார் மயமாக்குதல் என்ற பெயரில் அதானி, அம்பானிகளிடம் பிரித்துக் கொடுத்துவிட்டது. கச்சத்தீவு மற்றும் காவிரி பிரச்சனைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஒரே செயல்பாட்டை தான் செய்து வருகின்றன.

ஆனால் நான் இருக்கும் வரை அதாவது நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது. இதை சொல்ல நான் பயப்படவில்லை. இந்த நிலத்தை, என் இனத்தை, என் மக்களை, என்னைத் தாண்டி தான் ஒருவர் தொட முடியும். இதனை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள் இது சத்தியம் என்று சீமான் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.