ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்தார். பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு தான் காரணம் அல்ல என்று சொன்னார். இதற்கிடையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை எனக்கு பிடிக்குமென ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், கூட்டணி கட்சி மற்றும் தேசிய கட்சியாக இருக்கிற காரணத்தினால் பாஜக விடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ஆதரவு கேட்டோம். அதோடு அவர்கள் போட்டியிட விரும்புகிற பட்சத்தில் ஆதரவு தெரிவிப்போம் என கூறினோம். வருகிற நாட்களில் பா.ஜ.க தரப்பில் வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளர்களை திரும்பப் பெற தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.