முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.

அதன் பிறகு ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நியமிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அது ஒரு மண்குதிரை என்பது பொதுமக்களுக்கும் அவரை சார்ந்திருப்பவர்களுக்கும் தெரியும் என்று கூறினார். அதன் பிறகு பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுக வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்ளுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும் மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பான கேள்விக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். ஆனால் அதில் கால் பகுதி அளவுக்கு தான் கருணாநிதியை நினைவிடத்திற்கு செல்கிறார்கள். இதனால் பொது மக்களின் வருகையை அதிகரிப்பதற்காகவே திமுகவினர் வஞ்சக புத்தியுடன் பேனா நினைவு சின்னத்தை அமைக்கிறார்கள் என்று கூறினார்.