ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில் களப்பணிகள் செய்வதில் திறமையானவரான அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதி காத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் தற்போது செந்தில் பாலாஜியை வைத்து திமுக மேலிடம் பக்கா பிளான் ஒன்றை போட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது அதிமுக மற்றும் அமமுக போன்ற கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை திமுகவின் வசம் இழுப்பதற்கான வேலைகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து கட்சியிலிருந்து விலக விடாமல் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சைலண்ட் மோடில் ‌ அதிருப்தியாளர்களை திமுகவில் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் தற்போது இரட்டை இலை சின்னமும் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதும் எடப்பாடியை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.