
ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி சென்றிருந்தார்.
அந்த சமயம் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய லவ்லி குப்தா திருட்டு நடந்ததை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையிநற் நடத்திய விசாரணையில் ரூ. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.