ஜெர்மனியில் ட்ராம் ரயிலில் பயணித்த 21 வயது அமெரிக்க சுற்றுலாப் பயணி ஜான் ரூடட், இரு பெண்களைத் தாக்கிய கயவர்களைத் தடுக்க முயன்றபோது, முகத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெஸ்டன் நகரில், ட்ராம் லைன் 7-ல் நள்ளிரவு 12:25 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில், ரூடட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வீரச் செயலுக்காக அவர் பாராட்டப்பட, குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்கும் குறைவாகவே விடுவிக்கப்பட்டதாகவும், மற்றொருவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Gegen das Gendern (@gegendasgendern)

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பேசிய ஜான் ரூடட், “பெண்களைத் தாக்கியவன் ஜெர்மனி அல்லது ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் இல்லை. அவன் சட்டவிரோத குடியேறி, போதைப்பொருள் வியாபாரி, காவல்துறைக்கு நன்கு தெரிந்தவன். இது முதல் முறையல்ல, இவன் பெண்களைத் தாக்கியது.

மற்றவன் 6 அங்குல கத்தியால் என் முகத்தில் குத்தினான்” என்று குற்றவாளிகளையும், அவர்கள் விடுவிக்கப்பட்டதையும் கடுமையாக விமர்சித்தார். 21 வயது சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், ஆதாரமின்மை காரணமாக விடுவிக்கப்பட்டதாகவும், முக்கிய குற்றவாளி இன்னும் தப்பியோடி இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.