தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாக, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வருகை தந்து, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, திமுகவுக்குத் தனது கட்சியின் முழுமையான ஆதரவை அவர் உறுதிப்படுத்தினார். முன்னதாக, அறிவாலயம் வந்த அவரை திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முறைப்படி வரவேற்றார். கடந்த 2005-ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து, திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது
