ரூ.2000 நோட்டுக்கு பதிலாக ரூ.1000 நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமாஎன கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரூ.2000நோட்டுகளை திரும்பப் பெற்றாலும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என ஆர்பிஐ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளது. ரூ.500, ரூ.200, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்தில் இருப்பதால், புதிய ரூ.1000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்படாது என தெரிவித்துள்ளது.