இந்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2016-ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதாக புழக்கத்தில் இல்லை என்பதால் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வைத்திருந்தால் மே 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அதை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும். மேலும் ஒரு வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கோ அல்லது டெபாசிட் செய்யவோ அனுமதி கொடுக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி புகார் தெரிவிக்கலாம். அவர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றாலும் அவர்கள் அளித்த பதில் உங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என்றாலும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்தின் கீழ் cms.rbi.org என்ற மேலாண்மை அமைப்பு போர்டலில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.