இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள தகவல், நாடாளுமன்றப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் காரணங்களால் தான் பதவி விலகுவதாகவும், தொடர்ந்து நீடிக்கும் உடல்நலக்குறைவால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.

ஜகதீப் தன்கர், 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுன் மாவட்டத்தின் கிதான் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியை கிதானில், உயர்நிலைப் படிப்பை சைனிக் பள்ளி, சித்தோர்கர்-ல் முழு உதவித் தொகையுடன் முடித்தார். பின்னர் ஜெய்பூரில் பிஎஸ்சி ஹானர்ஸ் உடன் இயற்பியல் படித்து பட்டம் பெற்றார். கல்விக்குப் பிறகு அவர் ராஜஸ்தான் மாநில ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் டென்னிஸ் சங்க தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

“>

 

அவரது அரசியல் பயணம், ஜனதா தளம் வழியாக 1989-ல் மக்களவை தேர்தலில் வென்றதுடன் தொடங்கியது. அப்போது பிரதமர் சந்திரசேகரின் அமைச்சரவில் நாடாளுமன்ற விவகார இணை மந்திரியாக பணியாற்றினார். பின்னர் 2008-ல் பாஜகவில் இணைந்த அவர், நேர்மையான, திறமைமிக்க வழக்கறிஞர் என பாராட்டப்பட்டார்.

பிரதமர் மோடியும், அரசியலமைப்புப் புரிதலிலும், பேரவை நடத்தை மற்றும் சட்ட விவகாரங்களில் தன்கர் சிறந்த அறிவு பெற்றவர் என புகழ்ந்திருந்தார். கட்சி வரம்புகளை தாண்டி அனைத்து தரப்பினரிடமும் நல்லுறவை பேணுபவர் என அவர் அறியப்பட்டார். அவரது திடீர் ராஜினாமா, நாடாளுமன்ற கூட்டத் தொடர் மத்தியில் ஒரு முக்கிய முன்னோட்டமாகும் என அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.