சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவும் வீடியோ ஒன்று அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு வனவிலங்கு பூங்காவில் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சியில், ஒரு தாய் கொரில்லா மிக நேர்த்தியாக வைக்கோலை அடுக்கி சுத்தமாக பராமரித்து வைத்திருக்கிறது. ஆனால் அடுத்த நொடியே, ஒரு சுட்டிக் கொரில்லா பிள்ளை வந்து அந்த வைக்கோல் அடுக்கை கலைத்து வீசி ஓடுகிறது.
இதில் கிளைமாக்ஸ் என்னவென்றால், தாய் கொரில்லா தன்னுடைய தலையில் கை வைத்து ‘என்னால முடியலடா’ என்று மனிதர்களைப் போலவே ரியாக்ஷன் கொடுப்பது. இந்த மன அழுத்தம் கலந்த சிரிப்பூட்டும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “குரங்கு சேட்டை அப்படின்னா இதுதான்!” என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
Even in the animal world, they have to put up with annoying children! 🤣
The way this Gorilla mom throws her hands over her eyes, I can relate! 🦍🥰😂 pic.twitter.com/xJJUAko6Py
— James Pleickhardt (@JamesPleickhar2) July 18, 2025
இக்காட்சியை பார்த்த பலரும் மனிதனின் உணர்வுகளைப் போலவே விலங்குகளுக்கும் அனுபவங்கள், சலிப்பு, பொறுமை எல்லாம் இருப்பது தெரிய வந்துவிட்டது எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகள் அதிகமாக அட்டகாசம் செய்தால், ‘உன் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லையா?’ என பழையவர்கள் திட்டுவார்கள். அந்த பழமொழிக்கே உயிர் கொடுக்கும் விதத்தில் இவ்வீடியோ உருவாகியுள்ளது. இது தற்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட பல தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
