வயல்வெளியில் நடந்த சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெரிய வயல்வெளிக்குள் வேளாண் பணி செய்யும் டிராக்டர் ஒன்று நுழைகிறது. வழியில், ஒரு சிறிய தாய் பறவை, தன்னுடைய இறக்கைகளை விரித்து, ‘இந்த வழியா வராதீங்க’ என்று எதிர்க்கும் விதத்தில் அமர்ந்து நிற்கிறது.

தொடர்ந்து கவனித்த டிராக்டர் டிரைவர் அருகே சென்ற போது தான் அதே இடத்தில் பறவையின் முட்டைகள் இருந்தது தெரியவந்தது. எந்த உயிரினமாக இருந்தாலும், தாய் என்ற பந்தம் இவ்வாறு உயிரையும் பரிதவிக்க செய்கிறது என்பதை மீண்டும் நினைவூட்டும் நெகிழ்ச்சிகரமான தருணமாக இது மாறியுள்ளது.

இக்காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “தாயை விட பெரிய சக்தி உண்டா? உயிர் தியாகத்துக்கும் உதாரணம் தாய்தான்!” என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். மனிதர்களிடையே மட்டுமல்லாமல், பறவைகளிடமும், விலங்குகளிடமும் இந்த தாயுணர்வு எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. இது தற்போது இன்ஸ்டாகிராம், ஷோர்ட்ஸ் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.