தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், இனி 11ஆம் வகுப்பு (+1) பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தற்போதைய கல்வியாண்டு முதல் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கே மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். மேலும், 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் ஆல் பாஸ் கொள்கை தொடரும் என்றும், தமிழும் ஆங்கிலமும் அடங்கிய இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை தேசியக் கல்விக் கொள்கையில் முன்வைத்திருந்தாலும், தமிழக அரசு அதை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.