பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் வசம் இருந்த இலாகாவுக்கு பாட்டியாலா எம் எல் ஏ பல்பீர் சிங் அமைச்சராக நியமிக்க படலாம் என்று கூறப்படுகிறது.