
இந்தியாவில் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு 3000 ரூபாய் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையை அறிய அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு இணையதளமான PIB ஆராய்ந்த போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் மாதம் தோறும் 3000 ரூபாய் வரை பெண்களின் கணக்கில் மத்திய அரசு செலுத்தும் என வைரலான பதிவு முற்றிலும் போலியானது எனவும் மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இது போன்ற தவறான பதிவுகளை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.