இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அனந்தராமன் என்பவருக்கு மின் கட்டணம் 12 ரூபாய் கட்டினால் போதும் என்ற சலுகையுடன் மெசேஜ் வந்துள்ளது. அதனை உண்மை என்று நம்பி லிங்கை கிளிக் செய்தவருக்கு அக்கவுண்டில் இருந்து 1,98,915 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தக் கொல்லையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த நாராயணன் சிங், மஞ்சித் சிங்க் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் இவர்கள் பலரது அக்கவுண்டில் இருந்து இதுவரை 75 லட்சம் திருடி உள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே இது போன்ற மெசேஜ் ஏதாவது வந்தால் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.