இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, இன்று மாலை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடற்கரையோரங்களில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும்.

கடலில் ஏற்படும் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை ஏற்படும். ஒரு அலையின் உயரம் 1.2 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் கடற்கரைக்கு படகுகளில் யாரும் செல்ல அனுமதி இல்லை, பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் கடற்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்கள் தகுந்த முன்னேற்பார்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.