கோடை வெயில் என்பது மே மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலானோர் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எவ்விதமான ஆடைகள் அணியலாம் என்பது குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆடையின் நிறம் வெயிலின் தாக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் வெப்பத்தை அதிகம் உள்வாங்கும் நிறமாக கருப்பு இருப்பதால் கருப்பு நிற ஆடையை கோடை கால நேரத்தில் அணிவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அதற்கு மாறாக வெண்மை நிறத்தை அணிந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம் என வாய் வார்த்தையுடன் கூறுவதோடு மட்டுமல்லாமல்,

அதை ஒரு செய்முறை வீடியோவாக காண்பித்து மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதில் பல்வேறு  நிறங்களில் பலூன்கள் காற்றால் நிரப்பப்பட்டு,   அது பூதக்கண்ணாடி   லென்ஸ் மூலம் சூரிய ஒளியில் காட்டப்படுகிறது.  அதில் கருப்பு நிறம் நீல நிறம் உள்ளிட்ட பலன்கள் உடனடியாக வெடிப்பதும், வெண்மை நிறம் வெடிக்காமல் 

 தப்பிப்பதும் பதிவாகியுள்ளது. இதன் மூலம்  வெப்பத்தை அதிகம் கிரகித்து கொள்ளாத நிறமாக வெண்மை நிறம் இருப்பதை உறுதி செய்துள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.