தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் டெங்கு, மலேரியாவை போல சனாதனமும் ஒரு கொடுமையான வைரஸ் எனவும், அதனை ஒழிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசிய இப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளப்பை ஏற்படுத்தியதோடு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆகவே அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் வரை வெகுமதியும் அறிவித்த நிலையில் தான் பேசியதை திரும்ப பெற போவதில்லை என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நவம்பரில் தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்கு அவரின் எதிர்ப்பு பேச்சு தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனாலும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த திருப்பதியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல், சனாதனத்தை ஒழிப்பேன் என தமிழ்நாட்டிலுள்ள ஒரு இளம் தலைவர் கூறியுள்ளார்.
அவருக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன் என சனாதனத்தை அளிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பேசியுள்ளார். இவரின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூலாக okay, let’s wait and see என பதிலளித்துள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் மட்டும் இன்றி தி.மு.க எம்.பி ஆ. ராசாவும் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.