கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாரோடு பகுதியில் சென்ற போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த யூஜினை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யூஜின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.