ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜான் கொக்கேன். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் பார்த்து ரசித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, முதல் ஜல்லிகட்டு அனுபவத்தை தந்த மதுரைக்கு நன்றி. மதுரையில் ஒவ்வொரு தருணத்தையும் நேசித்தோம். மதுரை உணவையும் ருசித்தேன். அதிலும் குறிப்பாக துணிவு திரைப்படத்தை மதுரையில் பார்த்து என்ஜாய் செய்தேன் என பகிர்ந்து இருக்கின்றார்.