பிரபல இயக்குனரின் கதைக்கு சூர்யா ஓகே சொல்லிவிட்டதாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி தற்போது மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.
இந்நிலையில் சூர்யாவுக்காக ஒரு கதையை தயார் செய்திருப்பதாகவும் அதை சூர்யாவிடம் தெரிவித்த போது அவர் ரொம்பவே பிடித்து விட்டதாக கூறியதாகவும் நாம் செய்வோம் என சொன்னதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் கைவசம் தற்போது இருக்கும் படங்கள் சில காரணங்களால் தள்ளி போய்க்கொண்டிருப்பதால் விரைவில் சூர்யாவிடம் இருந்து அழைப்பு வரும் என நம்புவதாக தெரிவித்து இருக்கின்றார்.