அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற 2019ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 2024-ஆம் வருடம் ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று ஸ்ரீராம் ஜென்மபூமி பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தற்போது ராமர் கோவில் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. வருகிற 2024 ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள் ராமர் சிலை நிறுவப்பட்டு அன்றைய தினமே பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.