
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதே ஒவ்வொரு ஆசிரியர்களின் நோக்கமாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 2024-25 ஆண்டுக்கான, தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், சிறப்பாக பாடங்களை கற்றுக்கொடுக்கும் அறிவியல் ஆசிரியர்களில் 10 பேரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அதன் பின்பு அவர்களுக்கு விருது, காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இம்மாதத்திற்கான அரசு பள்ளியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 3000 ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்போட்டியில் நீங்களும் சேர விரும்பினால் ஆசிரியர்கள், www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் பரிந்துரை பெற வேண்டும். அதன் பின்பு 23.12.2024 அல்லது அதற்கு முன்பாக அறிவியல் நகர அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.