திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகன் கிஷோர்(9)
பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி கிஷோர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கிஷோரை தேள் கொட்டியதாக தெரிகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிஷோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.