ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு சிந்தாமல் வாக்கு செலுத்தவேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்று 21 மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. எங்கு பார்த்தாலும் ரவுடிசம், கட்டபஞ்சாயத்து மது விற்பனை நிகழ்ந்து வருகிறது. இதற்கிடையில் திமுக-வினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.

ஏனெனில் அது உங்கள் பணம்தான். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை சீர்குலைத்து வருகிறார். தி.மு.க-வினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.