அன்றாட வாழ்வில் பொதுமக்கள் சமையல் போன்ற காரணங்களுக்காக எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது.

15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பின் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது எஸ் எம் எஸ் அனுப்பப்படுகிறது.