நாட்டில் பொதுவாக ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஒரு உச்சவரம்பை நியமித்துள்ளது. அந்த உச்சவரம்புக்கு மேல் ஒரு நாளைக்கு வாடிக்கையாளர்களால் பணம் எடுக்க முடியாது. இந்நிலையில் நாட்டில் உள்ள சில முக்கிய வங்கிகளில் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் வர எடுக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பொதுத்துறை வங்கியான SBI-ல் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை எடுக்கலாம்.

அதன்பிறகு இந்தியன் வங்கியில் 25 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை எடுக்கலாம். இதேபோன்று  கனரா வங்கியில் ஒரு நாளைக்கு 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை எடுக்கலாம். இதனையடுத்து ஹெச்டிஎஃப் சி வங்கியில் 25 ஆயிரம் முதல் 3 லட்ச ரூபாய் வரை எடுக்கலாம். மேலும் ஆகிசிஸ் வங்கியில் 40,000 முதல் 3 லட்ச ரூபாய் வரையிலும், ஐசிஐசிஐ வங்கியில் 50,000 முதல் 2,50,000 வரையிலும், Bank Of India-வில்‌ ரூ‌. 15000 முதல் ஒரு லட்சம் வரையிலும், பேங்க் ஆப் பரோடா வங்கியில் 25 ஆயிரம் முதல் 1,50,000 வரையிலும் பணம் எடுக்கலாம்.