இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் கார்டு மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது நாம் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் ஏடிஎம்மில் பணம் வராத போதும் வங்கி கணக்கில் அந்த தொகை எடுக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக அந்த பணம் ஒரு சில மணி நேரத்தில் திரும்பி வரவு வைக்கப்பட்டு விடும். இருந்தாலும் ஏடிஎம் ரசீதை வைத்து வாடிக்கையாளர் மைய எண்ணில் புகார் அளிக்க வேண்டும். அப்போது புகாரை பதிந்து டிராக் எண் தரப்படும். அதன் பிறகு ஐந்து நாட்களில் வரவு வைக்கப்படும். இல்லையென்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் அளிக்க வங்கி கடமைப்பட்டுள்ளது.