கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்த கிருஷ்ணா இயக்கியுள்ளார். இதில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல திரைப்படத்தின் முதல் பாடலான “நம்ம சத்தம்” பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர்  வெளியிட்டனர். இதனிடையே இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர். இதில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதை மறுக்கும் வகையில் இயக்குநர் கிருஷ்ணா “புரோமோ வீடியோவில் சிம்பு நடிக்கவில்லை. நாங்கள் திட்டமிட்டே புரோமோ வீடியோவை எடுக்கிறோம். ஆகவே அவருடையப் பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம். பத்து தல திரைப்படத்தின் விளம்பர புரோமோஷன் பற்றி தயாரிப்பாளர்களுக்கு தெளிவான யோசனை இருக்கிறது. நாங்கள் வெறுப்புப் பேச்சை வெறுக்கிறோம்” என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.