நடிகர் தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கியமான வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.

கடந்த 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை நடப்பு ஆண்டு தீபாவளி வெளியீடாக கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.